எங்க வீட்டு செல்லக் குட்டி.. செல்லச் சிரிப்பால் சவால்களை தாண்டி.. 3 வயதில்!
- தெ.நாராயண லெட்சுமி, B.E
நிலன் குட்டிக்கு அன்பு அத்தையின் 3வது பிறந்தநாள் வாழ்த்து
வாழ்க்கையில் சில குழந்தைகள் பிறந்த நாளிலிருந்தே பல சவால்களை சந்தித்தாலும், அவர்கள் சிரிப்பால் எல்லாரையும் மகிழ்விப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு அழகான குழந்தை தான் எங்கள் செல்ல குட்டி நிலன்.
என் தம்பி சென்னையில் ஜிம் நடத்தி வருகிறார்.அவருடைய மனைவி மதுவும் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். குடும்பத்தில் பெரியவர்கள் அருகில் இல்லாத சூழ்நிலையில் கூட, இவர்கள் இருவரும் தங்களின் முதல் குழந்தையை மிகுந்த தைரியத்துடன், அன்புடன் உலகிற்கு வரவேற்றார்கள்.
கர்ப்ப காலத்தின் கடைசி நாட்களில் ஏற்பட்ட அவசர நிலைமையில் கூட, என் தம்பி தான் எல்லாவற்றையும் சமாளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அந்த குட்டி உயிரை பாதுகாப்பாக இந்த உலகிற்கு கொண்டு வந்தார்.
பிறந்த பிறகு சிறிது காலத்தில் நிலன்க்கு ஒரு உடல்நலப் பிரச்சனை ஏற்பட்டது. சிறிய வயதிலேயே ஒரு ஆபரேஷனையும் எதிர்கொண்டான். ஆனால் அனைவரின் பிரார்த்தனையும், பெற்றோரின் அன்பும் காரணமாக இன்று அவன் நலமாக இருக்கிறான்.
அம்மா, அப்பா இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில், ஒரு வயது முடிந்ததும் day care செல்ல ஆரம்பித்தான். இந்த வயதில் இருந்தே வாழ்க்கையின் சிறிய சவால்களை சந்தித்து வளர்ந்து கொண்டிருக்கிறான்.
முதல் பிறந்தநாளை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள். இரண்டாவது பிறந்தநாளை மலேசியாவில் கொண்டாடினார்கள். இப்போது மூன்றாவது பிறந்தநாளை சிம்லாவில் மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் துபாயில் இருப்பதால், அவன் பிறந்த நேரத்திலும் பல முக்கியமான நிகழ்ச்சிகளிலும் அருகில் இருக்க முடியவில்லை. ஒரு அத்தையாக அது எனக்கு வருத்தமாக இருந்தாலும், என் மனமெல்லாம் அவன் மீது அன்பும் ஆசீர்வாதமும் நிறைந்தே இருக்கிறது.
நாம் முப்பது, நாற்பது வயதில் சந்திக்கும் கஷ்டங்களை, இந்த சிறிய வயதிலேயே நிலன் குட்டி எதிர்கொண்டிருக்கிறான். அதனால் தான் இந்த குட்டி எதிர்காலத்தில் இன்னும் வலிமையானவனாக, உயர்ந்தவனாக, எல்லா நல்லதையும் அடைய வேண்டும் என்று என் மனமார வேண்டி கொள்கிறேன்
எங்கள் செல்ல நிலன் குட்டிக்கு இனிய 3வது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! நீ எப்போதும் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் இருந்து வாழ்க்கையில் உயர உயர பறக்க வாழ்த்துகள்.
எல்லாரும் சேர்ந்து இந்த குட்டிக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் வழங்குங்கள்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தமிழ் மகிழ்நிலன்!
(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)