என் வீட்டுத் தோட்டத்தில்.. !

Su.tha Arivalagan
Nov 21, 2026,11:14 AM IST

- பி. ஏஞ்சல்


முத்தைத்... தேடி 

ஆழ்கடல் செல்லவில்லை...


பவளத்தைத்.. தேடி 

பவளப் பாறைக்கு செல்லவில்லை


மரகதம் தேடி

மாமலை ஏறவில்லை....


முத்து, பவளம், மரகதம் 

மூன்று ரத்தின மணிகளும்...

ஒருங்கே இணைந்து 


பவளமல்லியாய் பச்சை இலைகளுடன் 

பசு மரத்தில் பாங்காய் மலர்ந்ததே....

என் வீட்டுத் தோட்டத்தில்....!




இறைவனின் படைப்பை 

இயம்பிட முடியவில்லை....


கண்ணிற்கு புலப்படாது 

எங்கும் நிறைந்திருப்பவனே 

என் இறைவா என் சொல்லி வாழ்த்துவனே...!