PR Helen Poems: இயற்கை

Su.tha Arivalagan
Apr 18, 2026,04:12 PM IST

- பி.ஆர். ஹெலன்


விடியற் பொழுது பறவைகளின் கீச் என்ற ஒலியுடன்

கோவில் மணி ஓசையுடன்

தர்காவின் ஓதல் அது ஒலித்திட


மெல்லிய வாடைக் காற்று சில்லென்று வீசிட

மெளனமான ஓசையுடன் மலர்கள் மெல்ல மலர்ந்திட

வணங்கச் சென்றால் 

ஆற்றலைக் கொடுக்கும் ஒளியதனால்

சுட்டெரித்து காலைப்பொழுதின் மயக்கத்திலிருந்து தட்டியெழுப்புகின்றான்

நம் கடமையாற்ற


என்னே! இயற்கையதன் தன்மை.




எங்கோ ஒலிக்கும் சுப்ரபாதத்தின் சங்கமத்தோடு

காலைக் கடன் முடித்து கிழக்கே உதிக்கும் ஆதிரவனை வணங்குவோம்!


--


யார் குற்றம்?


வெப்பம் வெப்பம் என்கிறாய் 

இதற்கு காரணம் யார் எண்கிறாய் 

நீயும் நானும் தானே?


மரங்களை நடு நடு என்கிறாய்

தேவை தேவை என்று பிடுங்கி எறிகிறாய் 

நீயும் நானும் தானே?


மரங்களை நட்டால் மழை கிடைக்கும் என்கிறாய்


மரங்களை வெட்டி மரச்சாமான்கள் செய்து மகிழ்கிறாய்


நீயும் நானும் தானே!


புவி வெப்பமயமாதலுக்கு 

ஹைட்ரோ கார்பன் காரணம் என்கிறாய்


குளிர்சாதனப் பொருட்காளின் பயன்பாடில்லாமல்

வாழமாட்டேன் என்கிறாய்


நீயும் நானும் நிணைத்தால் 

புவியின் வெப்பத்தை என்ன 

புவியையே குளிரவைத்து மகிழலாம்.


(P.R. ஹெலன், கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்ப்பட்டாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.மிகுந்த திறமையும், அர்ப்பணிப்பு உணர்வும், நேர்மையும் கொண்ட ஒரு சிறந்த ஆசிரியர். ஏராளமான தமிழ்க் கவிதைகளை இயற்றியுள்ளார். இவர் கற்பித்த பாடத்தில் SSLC தேர்வில் 100 சதவீத தேர்ச்சி முடிவை (Centum result) பெற்றுத் தந்துள்ளார்)