நினைத்தது நடந்ததே
Oct 12, 2026,04:44 PM IST
- பாவலர் மாயோன் மங்கை
எண்ணென்னவோ
எண்ணங்களைச் சுமந்த
இதயத்திலே
எண்ணங்கள் எதுவுமே
நிறைவேறாத ஏக்கத்திலே
எண்ணத்தைச் சொல்வதற்கு வெட்கமும் அச்சமும்
எண்ணியபடி இரவின்
நிலவில் எத்தனை கனவு கள்
எண்ணற்ற ஏக்கம்
பெருமூச்சுடன் எப்போது உறங்கினேன்
எண்ணத்தின் அலையோடு
வைகறை வரவேற்றது
தெரிய வில்லை
எண்ணமே என்னை எழுப்பியது
என்ன
மாயம்
எண்ணத்திலே கனவாக. தினந்தோறும்
எண்ணற்ற தொல்லை தந்தவன்
வெளியே சொல்ல முடியாது
தவிக்க வைத்தவன்
எண்ணுவதற்குள்
என்னை இருகரம்
கொண்டு தூக்கி விட
எண்ணியது ஈடேற
சார்ந்தவள்
சாய்ந்தே கிடக்கின்றேன்
சற்று விலகிக் கொள்ளுங்கள்