Tamil Poem: ஒரு இதயத்தின் காதல்
Jul 04, 2026,11:30 AM IST
- பாவலர் மாயோன் மங்கை
என்றோ நிழலாடிய நினைவுகள்
என்றும் நிசமா க்க
எண்ணங்கள்
உனக்குத் தெரியாது நீ
என்னுள் இருப்பது
உன்னையே எழுதிக்
கொண்டிருப்பது
கடலோரத்தில் கைகோர்த்துக் கனவுகளை
நான் சொல்ல
கரையோரம் நண்டிரண்டு
நுரையோடு சேர்ந்து வர
தோளில் சாய்ந்துகொண்டு
துவண்டுபோய் நடந்து வர
ஒட்டிக்கொண்டேன்
உன்னோடு ஓரக்கண்ணால்
பார்த்தேன்
அள்ளிக்கொண்டு எனை
அனைக்க உன்
அரும்புமீசை குத்திவிட
கத்தினால் சற்றகர்வாய்
நான் கத்தாது ரசித்திருக்க
இதய மது இனிமை தர
இமையிரண்டும் தழுவிவிட
உனக்கெங்கே புரிகிறது
நான் கொண்ட காதலது