ஆதலினால் காதல் செய்வீர்!
Oct 23, 2026,01:31 PM IST
- பாவலர் மாயோன் மங்கை
அடியார்க்கு
ஆதிசிவன்மேல் காதல்
ஆழ்வார்க்கு அலைகடலுறங்கும்
அவன் மேல் காதல்
பெண் அலையை
ஆண் அலை காதலால்
துரத்துகிறது
பனித்துளி கதிரைக்
காதல் செய்கிறது
காற்று மலர் மேல்
காதல் கொள்கிறது
நிலவு இரவையும்
நிலம் வானையும்
காதலிக்கிறது
எனக்கு உன்மேல் காதல்
உனக்குக் காதல் யார் மீது
எனக்குத்
தெரியாது
ஆனால் நான் காதலிக்கிறேன்
இப்படித்தான்
காதல் கிறுக்குகள்
ஏதாவது கிறுக்குவார்கள்
பொய் மீது மெய் காதல் கொண்டால் தான்
எழுத்துக்கள் மாலையாகக் கவிதையாகிறது
காதல் இருந்தால் தான்
கல்லைக்கூட சிலையாக்க முடியும்
காதல் மனதில் கொண்டால் தானே
ஓவியம் அழகாகும்
காதலே கவிதை வரைவதற்குத் தூண்டுகிறது
கற்பனையில் வரிகள்
காதலாக மலர்கிறது
காதல் இல்லா வாழ்க்கை அர்த்தமற்றது
அனைத்து உயிர்களிடமும்
நேசம் காட்டுங்கள்
ஆதலினால் காதல் செய்யுங்கள்!