மருதாணிச் செவப்பே!

Su.tha Arivalagan
Apr 21, 2026,10:47 AM IST

- பாவலர் மாயோன் மங்கை


மருதாணிச் செவப்பே

மச்சானோட நெனப்பே‌‌‌


சிறுத்தாடும் இடையே

சிக்கிக்கிட்டதே மனதே


செங்காட்டு நெல்லே

செங்கரும்புச் சொல்லே


காவிரியின் வனப்பே

கலக்குது மினுமினுப்பே




வஞ்சிக்கொடி கொஞ்சும்நடை

தஞ்சமே  இலவம்பஞ்சே


முல்லைக்கொடி மெல்லச்சிரி

தள்ளாடுதே நெஞ்சே


பிரம்மன் படைத்தவளா

பிரமிக்க வைப்பவளா


இளங்கோ சிலம்பொலியா

இதயத்தின் துடிப்பதுவா


கோவர்த்தனகிரி 

மாவர்த்தனன்

சேவடிப் பனிச்சிந்தோ


ஏன் இப்படி நானிப்படி

பாடிக் கிடக்கின்றேன்


வா இப்படித் தேர் மறைவிலே

வாரித் தழுவிடுவேன்