முகத்தில் முகம் பார்க்கலாம்

Su.tha Arivalagan
Jul 18, 2026,01:47 PM IST
- பாவலர் மாயோன் மங்கை

என் பச்சைக்கிளியை
நெஞ்சிலே பச்சை குத்தி வச்சிருந்தேன்

நித்தமும்  கிளியுடனே
மொத்தத்தையும் சொல்லி  மகிழ்வேன்

பழமும் பாலும் வேண்டியதில்லை 
பக்கத்தில் நான இருக்க வேண்டும்

சிறகில்லாமலே
கிறங்கடிக்கும் காதல்
மொழி சிரிக்கும்

கிள்ளை மடியினிலே
கொள்ளை இன்பம்
நான் கொள்வேன்





கிள்ளைக்குப் பிள்ளை நான்
குட்டிக்  கிள்ளைக்கு
கட்டி முத்தம் தரக்
காத்திருப்பேன்

வழிகிடைத்தால்
விழிக்குள் வளர்ப்பேன்
மூச்சைக் கொடுப்பேன்
முகத்தில்  முகம்பார்ப்பேன்