நீ வருவாய் என!

Su.tha Arivalagan
May 28, 2026,02:47 PM IST

- பாவலர் மாயோன்மங்கை


நீ  வருவாய் என!


விழிகளிலே  விளித்துவிட்டு வெகு தொலைவில் தொலைந்ததேனோ?


மடைதிறந்த வெள்ளமென  

இரண்டு விழி

உகுக்குதடி


அழுதழுது விம்முகிறேன் 

நினைவலையில்

நீந்துகிறேன்




கடலில் விழுந்திருப்பின்

கரையாவது

சேர்ந்திருப்பேன்


காதலிலே விழுந்த

என்னைக் கரைதழுவக்

காத்திருப்பேன்


வானத்து த் தாரகையை

எண்ணிவிட விரல்நீட்ட


வானமே மறைத்துவிட்டால்

வனிதையே நான்

என் செய்வேன்


திரை கடல் ஓயும் வரை

நரைமுடி  காணும் வரை


பிறைநிலவே  நீ வளர்வாய்  வருவாயென

வழி மீது..........

நீ வருவாய் என