படிப்பினை (சிறுகதை)

Su.tha Arivalagan
Jan 29, 2026,04:15 PM IST

- தி. மீரா


முத்தழகு அந்தக் கிராமத்தில் கௌரவமான வீட்டில் வாழ்ந்தவர். அவள் வீட்டிற்கு ஒரே பெண். சிறிய வயதிலேயே கட்டிக் கொடுத்து விட்டார்கள் மாமனுக்கு. மாமன் ஆரம்ப காலங்களில் விவசாயம் செய்து நன்கு வருமானம் ஈட்டினார். நன்கு வாழ்ந்தனர். இரண்டு மகன்கள் பிறந்தனர். நல்ல படிப்பு படிக்க வைக்க இருவரும் வேலைப் பார்த்தனர். 


காட்டு வேலை பார்த்து வந்தாள் முத்தழகு. நூறு நாள் வேலைத் திட்டம் கட்டிட வேலை என்றெல்லாம் பார்த்து படிக்க வைத்து வேலைக் கிடைத்தவுடன் திருமணம் செய்து வைத்தார்கள். வாங்கியக் கடனுக்காக இருவரும் வேலைப் பார்த்து வந்த நிலையில் முத்தழகு கணவன் நோய் வாய்ப்பட்டு‌ சிகிச்சையும் செய்ய முடியாமல் மகன்களும் கண்டு கொள்ளாமல் இருக்கவே நொந்து போனான், கடைசியில்  இறந்தும் போனான்.




முத்தழகு மனம் மிகவும் வேதனை அடைந்தது. மகன்கள் வெளி நாட்டுக்குப் போய் விட்டதாக கேள்விப் பட்டாள்.அழுகையாக வந்தது.நமக்கென்று யாரும் இல்லை என்று நினைத்தாள். அவள் வாழ்வதற்காக மீண்டும் வேலைக்குப் போனாள். அவளால் பொருட்களை தூக்க கூட முடியவில்லை. அந்த அளவு உடலும் மனதும் இயலாமல் போயிற்று. அவள் வீட்டில் ரோஸி என்ற நாய் வளர்த்தாள். அது அழகாகக் குட்டிகள் போட்டு வாழ்க்கை நடத்தியது. குட்டிகள் பெரிதானவுடன் அது அதுத் தனித்தனியாகப் சென்று விட்டது. 


ரோஸி மட்டும் கூட இருந்தது. அவளிடம் நன்றி விசுவாசமாக. அவள் தன்னுடைய‌ குடிசை வீட்டில் தனியாக ரோஸியுடன் வாழ்கிறாள். அவள் வீட்டில் இருந்தாலும் வேலைக்குச் சென்றாலும் கூட இருந்து பாதுகாப்பாக  துணையாக உள்ளது ரோஸி. அவளுக்கு உதவி செய்ய ஓடி வருவதைப் பார்த்து இவளுக்கு உற்சாகம் வந்தது.


வாழ்வில் ஐந்தறிவு ஜீவன்களுக்கு உள்ள அந்த அக்கறை பாசம் அன்பு ஆறறிவு மனிதனுக்கு இல்லாமல் போகிறதே சுயநலத்தால். சிந்திக்க வைக்கிறது வளர்ப்பும்.


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)