பெற்றோர்களே உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள்
தேவகோட்டை : இன்றைய காலகட்டத்தில் கூட்டு குடும்ப அமைப்பு அரிதாகி போனதால், ஒரே வீட்டில் வசித்தாலும் அனைவரும் தனித்தீவுகளில் வசிப்பது போல் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது. டிவி, மொபைல் போன் பயன்பாடு அதிகரித்ததன் விளைவாக மனம் விட்டு பேசி, குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வாய்ப்பை இல்லாமல் போய் விட்டு. அவ்வளவு ஏன், அனைவரும் ஒன்றாக குடும்பமாக அமர்ந்து செலவிடும் நேரமே மிகவும் குறைந்து போய் விட்டது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
இதன் விளைவு, பெற்றோர்கள்-குழந்தைகள் இடையே இருக்கும் இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகள் பெற்றோர்களிடம் பல விஷயங்களை மறைக்கும் நிலை ஏற்படுகிறது. பல சமயங்களில் பல குழந்தைகள் தவறான வழிகளில் செல்வதற்கும் கூட இது காரணமாக அமைந்து விடுகிறது. இத்தகைய இடைவெளியை குறைக்கும் வகையில் தேவகோட்டை பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் சந்திப்பில் பள்ளியின் தலைமை ஆசிரியரின் பேச்சு அமைந்தது.
பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் :
தேவகோட்டை -சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் , பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் நடந்தது.
தேவகோட்டை -சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் , பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் நடந்தது. இதில் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் பெற்றோர்களிடம் பேசும் போது, பெற்றோர்கள் அனைவரும் பள்ளி முடிந்து வந்தவுடன் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். பள்ளியில் நடந்த நிகழ்வுகளை காது கொடுத்து கேளுங்கள். உங்களின் குழந்தைகளுக்காகத் தான் நீங்கள் கடுமையான வேலைகள் பார்த்து உழைத்து சம்பாதிக்கிறீர்கள் . அவர்கள் மனதில் இருப்பவற்றை உங்களிடம் இயல்பாக பேச சொல்லுங்கள்.
தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது அவர்கள் பேசுவதை காது கொடுத்து கேளுங்கள். மனம் விட்டு பேச சொல்லுங்கள். அப்போது தான் நிகழ்காலமும், எதிர்காலமும் நன்றாக இருக்கும். உங்கள் குழந்தைகளை இளம் வயதிலேயே நல்வழிபடுத்த நல் வாய்ப்பாக அமையும் என்று பேசினார்.பெற்றோர்கள் பலரும் பள்ளியில் நடைபெறும் நிகழ்வுகளை பாராட்டி பேசினார்கள். ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். சிறப்பாக பேசிய பெற்றோர்கள் உஷா மற்றும் நாகராஜ் ஆகியோருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.பள்ளியின் சிறப்புகள் குறித்து மாணவி நந்தனா பேசினார்.