C.M.சிங்காரவேலன் எனும் நான்... புதிய படத்தை எழுதி இயக்கும் பார்த்திபன்.. செம ஸ்டில் வெளியீடு!
Sep 13, 2025,05:23 PM IST
சென்னை: நான் CM நாற்காலியில் அமர்ந்த பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்கு பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான் என்ற போஸ்டரை வெளியிட்டு அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் பார்த்தின்.
பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தற்போது, தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுது்த மாதம் வெளிவர உள்ளது. இந்நிலையில், பார்த்திபன் தனது எக்ஸ் தள பக்கத்தில்,
Friends,
இன்று மாலை 4.46க்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது. உஷார்!!! என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பார்த்திபன் அரசியலுக்கு வருப்போகிறார் போலும் என்று இணையதள பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அதற்காக 4.46க்காகவும் காத்திருந்தனர்.
இந்நிலையில், மற்றும் ஒரு போஸ்டரை வெளியிட்டார். அதில், பெரியோர்களே, தாய்மார்களே,
வாக்களப் பெருமக்களே!
ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் . என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்!
போடுங்கம்மா ஓட்டு
Boat’சின்னத்தைப் பாத்து!
இப்படிக்கு,
C.M .சிங்காரவேலன் எனும் நான்….
‘சோத்துக் கட்சி’ எனப் பதிவிட்டு தான் எழுதி இயக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை பார்த்த மக்கள் இதுக்கு தான் இந்த அலப்பறையா என்று கமண்ட் செய்து வருகின்றனர்.