வெயிலோ மழையோ.. எதுவா இருந்தா என்ன.. சுரைக்காய் பஜ்ஜிதான் துணைக்கு இருக்கே!
- பசுங்கிளி
மழைக் கால மாலையோ அல்லது சுட்டெரிக்கும் வெயிலோ... பக்கத்துல ஒரு கப் சுடச்சுட டீ, தட்டில் மொறுமொறுவென்று சுரைக்காய் பஜ்ஜி இருந்தா... ஆஹா, அந்த சுகமே தனி தான்.
வெளியில மொறுமொறுன்னு, உள்ளே சுரைக்காயின் மென்மையோடு நாவில் கரையும் இந்த அசத்தல் பஜ்ஜியை இன்னைக்கே ட்ரை பண்ணி அசத்துங்க.
வாங்க எப்படி செய்லாம்னு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பிஞ்சு சுரைக்காய் (நீளவாக்கில்) - 1
கடலை மாவு - 1/4 கிலோ
அரிசி மாவு- 50 கிராம்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சமையல் சோடா- 1 சிட்டிகை
பெருங்காயத்தூள்- 1 சிட்டிகை
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
எண்ணெய்- பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் சுரைக்காயை சுத்தமாக கழுவி, தண்ணீர் இல்லாமல் துடைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் சுரைக்காயை நீளமாக இரண்டு துண்டுகளாக வெட்டி, வாழைக்காய் சீவுவது போல் சீவிக்கொள்ளவும்.
2. ஓர் அகலமான பாத்திரத்தில் மிளகாய் தூள், உப்பு, சோடா, பெருங்காயத்தூள் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு தண்ணீர் ஊற்றி கரைக்கவும்.
3. இது கரைந்தவுடன் கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் கொட்டி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
4. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் சீவி வைத்துள்ள சுரைக்காயை மாவில் நனைத்து, எண்ணெயில் போட்டு அப்படியே பொரித்து எடுக்கவும்.
5. பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்துக் கொள்ளவும்.
இப்போது சுவையான சுரைக்காய் பஜ்ஜி ரெடி! ஜாலியாக சுவைத்து மகிழுங்கள்.. அப்டியே ரெசிப்பி எப்படி இருந்துச்சுன்னு கமெண்ட்டிலும் வந்து சொல்லிட்டுப் போங்க.