என் நாவில் தமிழ், என் நெஞ்சில் தமிழ்!

Su.tha Arivalagan
Sep 24, 2026,10:27 AM IST

- பசுங்கிளி இளங்கோவன்


தமிழ் எங்கள் உயிருக்கு மேல்,

தாயின் கருவறையில் கேட்ட முதல் மொழி தமிழ்

நான் பிறந்தவுடன் கேட்ட மொழியும் தமிழ்

தாயின் மடியில் தவழ்ந்த முதல் மொழி தமிழ்


மழலை மொழி பேசும்போது 

மனதை வருடிய மொழி தமிழ்

அன்னை சொல்லும் போது

ஆதரவாய் நின்ற மொழி தமிழ்


மண்ணின் வாசம் தமிழே, மனத்தின் நேசம் தமிழே

எங்கள் பண்பாட்டின் வேரும் தமிழே

எங்கள் வாழ்வின் உயிரும் தமிழே

ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அழியாத மொழி தமிழ்




ஆறுகள் வற்றினாலும் வற்றாத மொழி தமிழ்

வள்ளுவன் குறளில் ஒலித்தாய்,

இளங்கோவின் காப்பியத்தில் நடந்தாய்

கம்பனின் கவியில் மலர்ந்தாய்

பாரதியின் பாடலில் முழங்கினாய்


உலகில் எந்த மூலையில் நாம் இருந்தாலும்

உதடுகளில் தமிழ் இருந்தால் உள்ளத்தில்

தாயகம் வாழும், தமிழை பேசுவது பெருமை

தமிழை காப்பது கடமை

தமிழை அடுத்து தலைமுறைக்கு கொண்டு செல்வது நம் பொறுப்பு


தமிழ் வெறும் மொழியல்ல

நம்முடைய வரலாறு, நம் பண்பாடு, நம் அடையாளம்

நம் பண்பாடு.. நம் உணர்வு


உயிர் பிரிந்தாலும், தமிழ் நம்மை விட்டு பிரியக்கூடாது

என் நாவில் தமிழ், என் நெஞ்சில் தமிழ்

என் மூச்சில் தமிழ், என் வாழ்வில் தமிழ்

உயிரை விட உயர்ந்தது தமிழ்

வாழ்க தமிழ், வளர்க தமிழ், தமிழே என் மூச்சு