உன் நினைவோடு கிராமத்தில் நான்!
Aug 26, 2026,01:18 PM IST
- பசுங்கிளி
சின்ன சின்ன ஆசை
சிரித்து மகிழ ஆசை
தாயின் மடி மீது தலை வைக்க ஆசை
தந்தையின் தோள் மீது
சாய்ந்து கொள்ள ஆசை
அண்ணா உன் அருகிருந்து முகம்
பார்க்க ஆசை
அக்கா உன்னோடு விளையாடிட ஆசை
மாமா நான் உன்னோடு வாழ்ந்திடவே ஆசை
மனம் விட்டு உன்னோடு பேசிடவே ஆசை
கைகோர்த்து கடற்கரையில் நடந்திடவே ஆசை
கடல் அலையில் உன்னோடு கால் நனைக்க ஆசை
மலை மீது உன் கை பிடித்து நடந்திடவே ஆசை
மழைச்சாரலில் உன்னோடு நனைந்திடவே ஆசை
நீ பாடும் கானங்கள் நானாக ஆசை
நீ விடும் மூச்சினிலே கலந்து விட ஆசை
உன் கண்ணுக்கு இமையாக நான் ஆக ஆசை
உன் விரலுக்கு நகமாக நான் இருக்க ஆசை
உன் உயிரோடு உயிராக கலந்து விட ஆசை
மாமா நீ ராணுவத்தில் நம் நாட்டை காக்க
மாமா நீ வரவேண்டும் சீக்கிரமே
உன் வரவை எண்ணி காத்திருப்பேன் ஆசையோடு