கபடி கபடி கபடி!

Su.tha Arivalagan
Jul 27, 2026,03:34 PM IST

- பசுங்கிளி


கபடி கபடி கபடி என்று ஆடப்போறேங்க

கால் இரண்டால் களத்தில் இறங்கி ஆடப்போறேங்க


கபடி கபடி கபடி என்று ஆடப்போறேங்க

மூச்சை அடக்கி முழுமூச்சாய் பாட போறேங்க


கபடி கபடி கபடி என்று ஆடப்போறேங்க

என் கண் இரண்டை சுழற்றி சுழற்றி ஆடப்போறேங்க




கபடி கபடி கபடி என்று ஆடப்போறேங்க

என் கை இரண்டால் எதிர் அணியை வளைக்க போறேங்க


கபடி கபடி கபடி என்று ஆடப்போறேங்க

மொத்தத்தில் போட்டியில ஜெயிக்க போறேங்க


அடுப்பு ஊதும் பெண்களுக்கு ஆட்டம் எதுக்குனீங்க

நான் கபடி ஆடி வரும் அழகை பார்த்து

அசந்து நின்னாங்க!