ஓ நிலாப் பெண்ணே

Su.tha Arivalagan
Jul 21, 2026,04:18 PM IST

- பசுங்கிளி


ஓ நிலாப் பெண்ணே 

விண் வெளியில்

நீ வருவாயென 

வழி மேல் விழி

விழி வைத்து காத்திருந்தேன்


பௌர்ணமியாய் வந்து விட்டாய்

உன் ஒளியின் அழகில்

என்

இமைகள் மூட மறுக்கின்றன


வெள்ளி நிலவே, வெள்ளி நிலவே

என்று கவிஞர்கள் பாடுகிறார்கள்




உனக்கு வெள்ளி உடம்பா, 

வெள்ளி சில நாளில் கருத்துவிடும்!


நிலாப் பெண்ணே 

என்னைப் பார்த்து

வெட்கப்பட்டு மேகத்திற்குள்

மறைந்து சென்றாயோ? 


மறைந்து செல்வது சரி

ஆனால் என்னை நினைத்து, தேய்வது சரியா?


உன்னை முழு மதியாக பார்த்தால் தான்

என் மனதில் நிம்மதி.-