மனதிற்கு இதமாகவும்.. கண்களுக்கு விருந்தாகவும்.. திருவாசகம்!
Oct 15, 2026,05:20 PM IST
- பசுங்கிளி
என் வீட்டில்
புத்தக அறையை திறந்து பார்த்தேன்
புத்தகங்கள் என்னிடம் பேசின
மீட்டாத வீணையாய் இருக்கிறேன்
என்னை மீட்டுவாயா என்றது... கனிவாக
புத்தகத்தை கையில் எடுத்து
அதன் மேல் உள்ள தூசிகளை
என் இதழ்களால் ஊதினேன்
புத்தகத்தின் பக்கங்கள் மெய் சிலிர்த்து மலர்ந்தன
என் விரல்கள், பக்கங்களை மீட்டின
என் மனதிற்கு இதமாகவும்,
என் கண்களுக்கு
விருந்தாகவும் இருந்தன
காதலாகி கண்ணீர் மல்கி படித்தேன்
திருவாசகத்தை!