தங்கமே உன்னை ரசிக்கிறேன்.. ஆனாலும் கொஞ்சம் வெறுக்கிறேன்
- பசுங்கிளி
தங்கமே உன் அழகைக் கண்டு ரசிக்கிறேன்
ஆனாலும் உன்னை வெறுக்கிறேன்,
உன் விலையைக் கண்டு
ஏழைப் பெண்களின் எட்டாக்கனியே
ஏறிக்கொண்டே போகும் உன் விலையே
ஆனாலும் உன் அழகைக் கண்டு ரசிக்கிறேன்
விலை ஏறும் போது, உன்னை வெறுக்கிறேன்
பத்து மாதம் சுமந்து, பெற்றெடுத்த என் தங்க மகன்
என்னோடு இருந்தான் நான் மகிழ்கிறேன்
பளபளவென்று இருந்தும் உன்னை வெறுக்கிறேன்
ஆனாலும் உன் அழகைக் கண்டு ரசிக்கிறேன்
உன்னை அணியும் போது வரும் ஆபத்தால்
உன்னை வெறுக்கிறேன்
என் தங்க மகன் கை பிடித்து, தெருவில் நடந்தால் ராஜ நடை
உன்னை கழுத்தில், காதில், கைகளில் அணிந்து சென்றால்?
ஆனாலும் உன் அழகைக் கண்டு ரசிக்கிறேன்
என் அறிவைக் கொண்டு உன்னை வெறுக்கிறேன்
உன் ஒளியைக் கண்டு நான் வியக்கிறேன்
ஆனாலும் உன்னை வெறுக்கிறேன்,
உன் கர்வத்தைக் கண்டு
அடுக்கு மாடி வீட்டு அழகிகளின் ஆரமே
அன்றாடக் கூலிக்கு அது வெறும் கனவே
ஆனாலும் உன் அழகைக் கண்டு ரசிக்கிறேன்
பதுக்கி வைக்கும் போது உன்னை வெறுக்கிறேன்