வண்ணமாக வரும் வானவில்லே
Mar 20, 2026,01:27 PM IST
- பசுங்கிளி
தடைகளை உடைக்கும் தாரகையே
தன்னலம் அற்ற தங்கப்பெண்ணே
தரணி ஆளும் சிங்கப்பெண்ணே
குழந்தையாக சிரிக்கும் செல்லப்பெண்ணே
தித்திக்க பேசும் அன்பு பெண்ணே
தத்தி தத்தி நடக்கும் என் அன்னப்பெண்ணே
தாவி ஓடிவரும் மானே
ஆடி அசைந்து வரும் என் மயிலே
கொஞ்சி பேசிவரும் என் குயிலே
வண்ணமாக வரும் வானவில்லே
விண்வெளியில் பவனி வரும் வீரப்பெண்ணே
இந்த மண்ணில் வெற்றி நடை போடும் சிங்கப்பெண்ணே.
கண்ணியம் காக்கும் கனிவானவளே
கற்பனைக்கும் எட்டாத அறிவானவளே!
உழைப்பால் உயரும் உன்னதமே
உயிராய் நிலைக்கும் என் தெய்வமே!
துணிச்சலைத் துணையாய் ஏற்றவளே
தோல்விகள் கண்டு கலங்காதவளே!
நிலவின் குளுமை கொண்டவளே
நெருப்பின் துணிச்சல் கொண்டவளே!
சிகரம் நோக்கிச் சிறகடிக்கும் சித்திரமே
தன்னம்பிக்கை விதையாய் முளைப்பவளே
தரணியின் விடியலாய் மிளிர்பவளே!