இலக்கியமும் மற்றும் இலக்கணமும்!

Su.tha Arivalagan
Jul 21, 2026,12:56 PM IST

- மும்மொழிக்  கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


செல்லமாய்க் கொஞ்சுவது

இலக்கியம்!

பூரிக்கட்டையால் அடிக்கக் கூடாது 

என்பது இலக்கணம்!


கார் வாங்கலாம் என்கிறது இலக்கியம்! 

கடன் வாங்கக் கூடாது 

என்கிறது இலக்கணம்!


எப்போதும் ஊர் சுற்றலாம் 

என்கிறது இலக்கியம்! 

எல்லா நாளும் ஞாயிறு அல்லவே

என்கிறது இலக்கணம்! 




எதிலும் ஆசையே ஆக்க சக்தி 

என்கிறது இலக்கியம்!

ஆசையே துன்பத்திற்குக் காரணம் 

என்கிறது இலக்கணம்! 


காப்பி தானே இன்னொன்று  

குடிக்கலாம் என்கிறது இலக்கியம்! 

அளவுக்கு மீறினால் அமிர்தமும் 

நஞ்சு என்கிறது இலக்கணம்! 


வாழ்க்கை வாழத்தானே 

என்கிறது இலக்கியம்! 

நிச்சயமற்ற வாழ்விலே எது 

நிரந்தரம் என்கிறது இலக்கணம்! 


ஜெயித்தால் கெட்டிக்காரத்தனம் 

தோற்றால் விதி என்கிறது

இலக்கியம்! எல்லாம் இறைவன்

செயல் என்கிறது இலக்கணம்


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).