நிம்மதியாய் வாழ வேண்டும்!

Su.tha Arivalagan
Aug 06, 2026,04:06 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி


நிம்மதியாய் வாழ வேண்டும்!

நித்தமும் நினை 

நினைத்து வாழ

நிமலனே நின்னருள் வேண்டும்!


சிறப்புடன் சிந்தை குளிர 

வாழ வேண்டும்

அதற்கு அந்த சிவசக்தி

உதவ வேண்டும்! 


புண்ணியங்கள் புரிய வேண்டும்! 

அதற்கு அந்தப் 

புருஷோத்தமன்

உதவ வேண்டும்! 




பாவங்கள் பண்ணாமல்

வாழ வேண்டும்! அதற்கு 

அந்தப் பரமன் சிவன் 

உதவ வேண்டும்! 


நல்வாழ்வு வாழ வேண்டும்! 

நல்ல படியாக அந்த 

நான்முகன் தலையில்

எழுதி இருக்க வேண்டும்!


சிறப்புகள் சேர வேண்டும்! 

சீர்பெருமை கிடைக்க வேண்டும்! 

அதற்கு அந்தச் சிவன் மகன் 

குகன் உதவ வேண்டும்! 


நல்லபடியாக இறைவனடி சேர 

இறைவன் அருள் வேண்டும்!

இதற்கு மேல் 

வேறு என்ன வேண்டும்?


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)