வாழ்க! வாழ்க!!

Su.tha Arivalagan
Nov 27, 2026,02:54 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசாமி 


நேற்று தூது சென்ற 

தோழி நீயும் வாழ்க! 


என்றும் தூது செல்லும் 

தென்றல் நீயும் வாழ்க!


மாட  வீதி எங்கும் தேடும் 

மங்கை நானும் வாழ்க! 




மங்கை மனமே கங்கை என்ற 

என் மன்னன் மாறன் வாழ்க! 


அன்னம்  விடு தூது கண்ட 

சங்க காலம் வாழ்க! 


அலை பேசியில் தூது விடும்

நிகழ்காலம் வாழ்க! 


கனவில் வரும் தலைவன் காண 

தூக்கம் தந்த இறைவன் வாழ்க! 


நேற்று இன்று நாளை என்னும் 

முக்காலமும் வாழ்க! வாழ்க!


கானல் நீர் ஆகாத 

நம்பிக்கை கங்கை வாழ்க! 


மாலை சூட வரும் மன்னவனே!

விரைந்து வருக! வாழ்க! வாழ்க!!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).