அம்மா!

Su.tha Arivalagan
Nov 13, 2026,12:04 PM IST

-  மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


அம்மா என்ற 

வார்த்தையில் தான் 

எத்தனை அன்பு 

நதியாய் ஓடுகிறது! 


அம்மாவிற்கு 

இணையாய்க்

கூறுவதற்கு 

யாருமே கிடையாது! 




அம்மாவிற்கு நிகர் 

அம்மா மட்டுமே 

என்பதுதான் 

ஸாஸ்வதம்! 


அருகில் இருந்தாலும் 

தொலைவில் இருந்தாலும் 

அம்மாவின் எண்ணம் முழுவதும் 

குழந்தையைச் சுற்றியே!


பட்டினத்தாராலும் 

அம்மாவை 

மறக்க 

முடியவில்லை! 


ஆதிசங்கரர் அவராலும் 

அம்மாவை 

மறக்க 

முடியவில்லை! 


அம்மாவை 

நினைத்தால்

ஆனந்தக் கண்ணீரும் 

வரும்! 


அம்மா இல்லாத 

நபர்களுக்கு 

விழிநீர்

நதியாய்ப்  பெருகும்!


மனிதர்களே!

அம்மாவே உலகம்!

அம்மாவே தெய்வம்!

அம்மாவைக் கொண்டாடுவோம்!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).