என்னவளே!
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
வயதாகிக் கொண்டே
போகிறதே என்னவளே!
காலத்தை நிற்கச் சொல்லிக்
கடுதாசி போடுவோமா!
சுழன்று கொண்டே
இருக்கும் பூமியைச்
சற்றே சுற்றாமல்
நிற்கச் சொல்வோமா!
காலையிலும் மாலையிலும்
மாறி மாறி வரும்
சூரியன் சந்திரனை விடுமுறை
எடுக்கச் சொல்வோமா!
ஆண்டவனை ஆதரிக்கச்
சொல்லி
விண்ணப்ப மனு
கொடுக்கலாமா?
கடிகாரத்தை நிற்கச் சொல்லி
காலண்டரைக் கிழிக்காமல்
இருந்து முயற்சித்துப்
பார்க்கலாமா!
நவக்கிரகங்களை வேண்டி
ஒவ்வொரு நாளையும்
மெதுவாகச் செல்லச்
சொல்வோமா!
நமக்கும் அருளுமாறு
விதிக்கு விதிவிலக்கு
அளிக்குமாறு அந்தப்
பிறை சூடிய பெருமான்
சிவனை வேண்டுவோமா?
சொல்லடி என்னவளே!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)