எல்லாம் கூறினேனே பெண்ணே!

Su.tha Arivalagan
Sep 08, 2026,02:36 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


காலை வணக்கம் 

மாலை வணக்கம் 

நாளை வணக்கம் 

எல்லாம் கூறினேனே பெண்ணே!


ஒரு காஃபி கொடுக்க 

இன்னுமா தாமதம்? நான் 

கடுந்தவமாய்க்

காத்திருக்கலாமா? 


உனைப் பற்றி 

சிந்து கவி 

சந்தக் கவி 

எல்லாம் பாடினேனே பெண்ணே!




இன்னுமா 

தீரவில்லை 

என் மேல் 

உனக்குள்ள கோபம்?


கதிரவன் 

உச்சி வானத்திற்கு

வந்த பின்னும் காலை உணவு 

வரவில்லையே பெண்ணே? 


என் பசித்திருக்கும் 

வயிறு 

பாவம் இல்லையா 

பெண்ணே! 


சினம் விடுக 

பெண்ணே! எந்தன் 

குணவதியே 

கண்ணே! 


உனை விட்டால் உந்தன் 

மணாளன் எனக்கு

யார் உளரோ?

கூறு நீ என்னவளே!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)