உன் மொய் குழலுக்கு பூமாலை சூட்டவோ!
Sep 15, 2026,10:55 AM IST
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
உன் அழகிய கழுத்துக்கு
முத்துக்கள் கோர்க்கவோ!
உன் மொய் குழலுக்கு
பூமாலை சூட்டவோ!
கண் படக்கூடாது என்று
திருஷ்டிப் பொட்டு வைக்கவோ!
உன் அபிநய முகத்திற்கு
மஞ்சளே போதுமா!
உன் திருக் கமல நெற்றிக்கு
குங்குமம் வைத்து விடவோ!
உன் திருவாய்மொழி கேட்க
என் செவிகள் காத்துக் கிடக்குமோ!
சிற்றிடை மேகலை
அணிந்த நல்லாடையை
முற்றுகை செய்திடுமோ!
கொலுசுகள் கீதம் பாடுமோ!
அதை இயற்றிய
மாணிக்கவாசகர் நானோ!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)