ஆனந்த கானம் பாடுகிறாய்!

Su.tha Arivalagan
Sep 17, 2026,10:29 AM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


ஸ்வாகதம் கலாம்மா! உன்னில் 

சரி பாதி அழைக்கிறேன் 

ஸ்வாகதம் கலாம்மா!


ஆனந்த கானம் பாடுகிறாய்! 

ஆனந்த நடனம் ஆடுகிறாய்! 

ஆனந்த வாழ்க்கை வாழ்கிறேன்!


நீ பாடும் கீதம் கொஞ்சமோ

அந்த ராக பாவங்கள் எனைக் 

கேட்கச் சொல்லிக் கெஞ்சுமோ!




நீ பாடும்போது 

வார்த்தை அருவிகள் 

கொட்டுமோ! 


அந்தக் கவிதை வரிகள் 

எனைத் தூங்கச் சொல்லித்

தாலாட்டுமோ! 


உன் பார்வையில் 

ஆயிரம் 

அபிநயங்கள்! 


அவை 

உனக்கு மட்டுமே 

சாத்தியங்கள்! 


மான் ஆடும் 

மயில் ஆடும் 

உன் கானம் கேட்டு!


தேன் ஆறாய், பால் ஆறாய்

என் செவியில் 

தேவகானமாய் உன் பாட்டு!


உன் கால் சதங்கை 

சந்தக் கவி பாடும்! அதில் 

சிந்து நதி தோற்கும்! 


வாழப் பிறந்தவளே வா!

வாழ்க்கை தருபவளே வா!

ஸ்வாகதம் கலாம்மா!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)