ஓடும் நதிகள் எல்லாம் உன் முகவரி தேடித்தானோ?
Oct 15, 2026,11:31 AM IST
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
நீ இருக்கும் போது
எனக்கு
இந்த உலகில் வேறு
எதுவும் ஏனோ?
உனை நினைக்கும் போது
எனக்கு
கொண்ட கவலையெல்லாம்
வீணோ?
நீ படிக்கும்
பாடல் தானோ
நான் காதில் கேட்கும்
தேனோ?
வானில் தோன்றும்
முழு நிலவும்
உன் முகத்தைப்
பார்க்கத் தானோ?
ஓடும் நதிகள்
எல்லாம் உன்
முகவரி
தேடித்தானோ?
நீ பிறந்தது மட்டும்
என்றும்
எனக்கே
எனக்கே தானோ?
ஆகச் சிறந்தது எனக்கு
நீயே நீயே தானோ?
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).