"உள்ளன்பில் தெய்வம் அல்லவா நீ எனக்கு"
Nov 12, 2026,03:10 PM IST
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
ஒளி வீசும் வதனமாய்
நீ இருக்கும் போது
நிலவு தீபம் எதற்கு?
சூரிய வெளிச்சமாய்
நீ இருக்கும் போது
மெழுகுவர்த்தி வெளிச்சம் எதற்கு!
என் வானின் நட்சத்திரமாய்
நீ இருக்கும் போது
கற்பூர ஜ்வாலை எதற்கு?
கானல் நீர் வாழ்க்கையில் தாகம்
தீர்க்கும் கங்கையாய் நீ இருக்கையில் கவலை ஏன் எனக்கு
குளம் வற்றலாம்!
வற்றாத கடலாய்
உன் அன்பு எனக்கு!
காற்றின் வகை பல!
ஆனால் எப்போதும்
தென்றலாய்த்தான் நீ எனக்கு!
நீ எனக்கு!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).