எந்தன் ஈசனே! சிவனே!
Sep 19, 2026,04:15 PM IST
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
என் சிந்தனையை, செயலை
வழி நடத்துபவனே!
அனைவர்க்கும்
இறைவனே!
உண்டுறங்கி
மகிழ்ந்ததன்றி
வேறொன்றும்
அறியாத
என்னையும்
ஒரு பொருட்டாய்
நினைத்து வாழ
வைப்பவனே!
முக்கண்ணனே!
முதல்வனே!
எந்நாட்டவர்க்கும்
இறைவனே!
எனை வாழ்விக்க
வந்த எந்தன்
பரம்பொருளே!
பரமேஸ்வரனே!
சிந்தை நிறைந்த
சிவபெருமானே!
உலகத்து வாழ்க்கையிலே
உழன்று வரும் எனக்கு
அருள் புரிந்து
ஆதரித்து என்னை
வாழவைப்பவனே!
எந்தன் ஈசனே! சிவனே!
நான் பேசுபொருள்
அத்தனையும்
உன்னையல்லால்
வேறொன்றுமில்லை!
உன் திருவடி தொழுதேன்!
திருச்சிற்றம்பலமே!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)