நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
Oct 16, 2026,05:18 PM IST
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
பல் எல்லாம் விழுந்து
பொக்கை வாய்க்
கிழவனாகவே
இருந்த போதிலும்
அழகு வேண்டும்
பல் வேண்டும் என்று நான்
ஆசைப்பட்டதெல்லாம்
கிடையாது!
ஆனால் நீ விரும்புகிறாயே
என்பதற்காக மட்டும்
அந்த ரணவேதனையைத்
தாங்கிக்கொண்டு
பல் கட்டிக் கொண்டு
இருக்கிறேன் பெண்ணே!
நீ கேட்டு எதை
மறுத்திருக்கிறேன் என்னவளே!
சுகர் இருக்கிறது என்று
டாக்டர் எத்தனை சொன்னாலும்
அதற்கெல்லாம் கவலைப்
பட்டது கிடையாது!
பாகற்காய் எனக்குப்
பஞ்சாமிர்தமாகத் தெரிகிறது!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).