மணிமகுடம் சூட்டவா? மலர்க் கொடியே அருகில் வா!
Sep 09, 2026,04:36 PM IST
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
மணிமகுடம் சூட்டவா?
மலர்க் கொடியே அருகில் வா!
சிறகடித்துப் பறக்கவா?
சிறு கிளியே நீயும் வா!
நீ சொன்னதெல்லாம்
கேட்கவா?
உன் சொல் எல்லாம்
அமுதம் அல்லவா!
நீ சிரிக்கின்ற பெண் நிலவா?
வானில் வருகிறதே விண்ணிலா
அது உன்னைப் பார்க்கவா?
மற்றும் உன்னோடு பேசவா?
தேனில் நனைந்த
பலா அல்லவா!
அது போல் தித்திப்பது உன்
திருவாய்மொழி அல்லவா!
நல்லதே நடக்கும் அல்லவா!
என்னோடு நீ இருக்கும்
போதெல்லாம் அல்லவா! எமை
எப்போதும் வாழவை இறைவா!
உத்தமியே! என் உயிரும்
நீ அல்லவா!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).