நன்றொன்று உண்டென்று

Su.tha Arivalagan
Jul 25, 2026,03:03 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


நன்றொன்று உண்டென்று 

நான் எழுதுகிறேன் 

கவிதை! 


பிறர் மகிழ்வர் மனம் குளிர்வர் 

என்றெண்ணி நடுகிறேன் 

மரக்கன்றை! 


பிறர் புசிப்பர்! பசி மறப்பர் 

என்றெண்ணிக் கொடுக்கிறேன் 

என்னால் இயன்றதை! 


பிறர் வருத்தம் நீங்க 

அவர் கண்ணீர் துடைக்க 

நீள்கிறது என் விரல்கள்!




பிறர் கஷ்டம் தீர 

அவர்கள் கவலைகளைக்

காது கொடுத்துக் கேட்கிறேன்!


பணம் கொடுக்க முடியாவிட்டாலும்

ஆதரவு வார்த்தைகள்

உதிர்க்கிறேன்!


அனைவரையும் 

உறவினராய் நண்பர்களாய்ப்

பார்க்கிறேன்! 


எல்லோரும் கடவுளின் 

குழந்தைகள் என நினைத்து 

அனைவரையும் நேசிக்கிறேன்! 


போரில்லா உலகு கொடு என 

அந்த இணையில்லா ஈசனை 

யாசிக்கிறேன்! 


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).