எங்கள் வீடு!
Nov 16, 2026,02:41 PM IST
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
அன்றில் பறவைகள்
வாழும் ஒரு கூடு!
ஆண்டவன் கொடுத்த
நம் வீடு!
என்னவளே நாளும்
நல்லதையே நாடு!
நற்காலை தோறும்
இனிய பூபாளம் பாடு!
இறைவனையே
மனதால் நாடு!
நம்பிக்கையோடு
வாழ்வில் நலமாய் ஓடு!
இதுவரை
நாம் பட்ட பாடு
பலன்தரப் போகிறது என்று
ஆனந்தக் கூத்தாடு!
நிம்மதியே
நாளும் தேடு!
நம் இல்லம்
ஆனந்தப் பூக்காடு!
வாழ வேண்டும் நாம்
பல நூறு ஆண்டு!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).