வேர் இன்றி விருட்சம் தான் உண்டோ?
Sep 26, 2026,02:37 PM IST
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
நான் இன்றி நீ உண்டோ!
நீ இன்றி நான் உண்டோ!
இதில் ஏதும் சந்தேகம் உண்டோ!!
அன்றில் பறவையில் ஒன்றின்றி
மற்றொன்று உண்டோ! நாமும்
அது போல் தான் அன்றோ!
வேர் இன்றி விருட்சம் தான்
உண்டோ! நம் இருவரில்
ஒருவர் இன்றி ஒருவர் உண்டோ!
நீ இருக்கும் போது எனக்குக்
கவலை உண்டோ!
இல்லை அன்றோ!
உன்னை என் மனமும்
என்னை உன் மனமும்
எப்போதும் நேசிக்கிறது அன்றோ!
நம் இருவருக்கும்
உடல் இரண்டு ஆனாலும்
உயிர் ஒன்று தான் அன்றோ!
உனக்காக எனைப் படைத்தானோ!
வா! நாம் மகிழ்ந்து வாழ்வோம்!
வாழ்வை வசந்தம் ஆக்குவோம்!
இறைவனைத் தொழுவோம்!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)