ஆண்டுகள் கழிந்தாலும் அன்னை மடிக்காக

Su.tha Arivalagan
Nov 17, 2026,12:24 PM IST

-  மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


குழந்தையாய் 

இருந்தபோது 

நிலா பற்றிக்

கதை சொல்லி 


உணவூட்டுவாய்! 

பொய்க் கோபம் காட்டி 

எனை அஞ்ச வைத்து 

நல்வழி காட்டுவாய்! 


வழி மேல் விழி வைத்து 

என் வரவை எதிர்நோக்கி 

வாசலையே

பார்த்திருப்பாய்! 




பண்டிகை நாட்களில் 

எனக்காக 

என்னென்னவோ 

வாங்கித் தருவாய்! 


உனக்கென்று 

எதுவும் வாங்க 

ஆசைப்பட 

மாட்டாய்! 


பசி அறிய விடாது 

வேளா வேளைக்கு

உணவளித்து 

எனை வளர்ப்பாய்!


கலைமகளாய் எனக்கு 

முதல் ஆசிரியை 

நீயாக இருந்து 

கற்றுத் தந்தாய்!


பருந்துகளிடமிருந்து 

குஞ்சுகளைக் காக்கும் 

தாய்க் கோழியாய்ப்

போராடுவாய்!


படிக்க வைத்தாய்!

வளர்த்து விட்டாய்!

கடமை முடிந்ததென்று

கண்மூடி விட்டாய்!


ஆண்டுகள் கழிந்தாலும் 

அன்னை மடிக்காக

ஏங்குகிறது இந்தப்

பிள்ளை உள்ளம்! 


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).