நிதானம்

Su.tha Arivalagan
May 11, 2026,03:45 PM IST

- கவிதா அறிவழகன்


வேகம் கொண்டு ஓடும்

இந்த உலகினில்,

சூறாவளி வீசும் பொழுது

விழுந்து எழும் மனிதனே!


நிதானம் தவறுகையில்

ஏற்படும் விளைவுகளையும்

அதன் பாதிப்புகளையும்

சந்திப்பது கடினம்.


அலைகள் ஆவேசமாய்

வீசும் பொழுது நாவடக்கமும் வேண்டும்;

பேசும் வார்த்தையில் குறையில்லாமல்,

நிதானம் என்ற நிழலான

நீர்த்துளியும் வேண்டும்.




தவறுகள் நேருவது

சகஜம் எனில்,

தர்க்கம் புரியாமல்

ஆழ்ந்து யோசித்து,

பின்வாங்காமல்,

நிலைதடுமாறாமல்

சரிசெய்து வாழ்வது

ஒரு அழகிய வாழ்வியல்.


புயல் ஓய்ந்த பின்னும், 

வேரூன்றி நிற்கும் மரம்போல், சோதனை சூழ்ந்த வேளையிலும் சோர்ந்திடாமல் தெளிவான மனதோடு நிதானம் காத்து நடந்திடின்

வெற்றி நம்மை சூழும்.


நம்முடைய இந்தப் பயணமானது,

அதிக சத்தமின்றி, மிதமான அமைதியோடு,

சலசலவென்று ஓடும் நதியைப் போல,

ஒவ்வொரு அடியையும் உணர்ந்து,

நிதானமான நடையோடு வாழ்ந்தால்,

மனிதனே!

நிம்மதி நிழலாய் உன்னைத் தொடரும்.


(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)