முழுமை - படைப்பின் நியதி (Perfection is the order of Life)

Maitreyi Niranjana
Nov 28, 2025,11:15 AM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


நடந்தவை, நடந்து கொண்டிருப்பவை நடக்கப் போவது என்று எல்லாமே சரியாக நடந்து கொண்டிருக்கிறது.. 


நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் விஷயங்கள் நடக்கும் போது நாம் அது நல்லது என்று நினைக்கிறேன்.. நமக்கு துக்கம் தருவது நடக்கும் போது அது நல்லதல்ல என்று நினைக்கிறோம்..


இவை எல்லாமே நம்முடைய சாய்ஸ் ஆக இருக்கும் போது.. நாம் சூழ்நிலைகளையும் வாழ்க்கையையும்.. பிறரையும் குற்றம் சொல்வது ஏன்? நாம் சில அமைதியான தருணங்களில்… நடந்தவற்றை நினைத்து பார்க்கும் போது எவ்வளவு சரியாக ஒவ்வொரு விஷயமும் நடந்தது என்று தோன்றும்..  நாம் சந்தித்த சில மனிதர்கள்.. சந்தித்த சில தோல்விகள்.. இவை எல்லாமே நம்மை பண்படுத்தும்.. நம்மை மாற்றக்கூடிய அனுபவங்களாக இருந்திருக்கின்றன.. இது எல்லாமே நம்முடைய சாய்ஸ் தானா என்று சந்தேகம் இருந்திருக்கும்.. அதுதான் உண்மை என்பதை நம் மனம் ஒத்துக் கொள்வதில்லை.. ஏதோ நாம் சூழ்நிலை கைதிகள் என்றும்.. வாழ்க்கை நம்மை வைத்து செய்கிறது என்றும் நினைப்பது நம்முடைய மனத்திற்கு.. நம்முடைய ஈகோவிற்கு அடிப்படையாக உள்ளது..




உண்மையை மறந்து இந்த வாழ்க்கை விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறோமா? 


ஒரு சிறிய கதையை பார்ப்போம்..


காஷ்முஷ் அப்போது.. ஒரு இயக்குனராக  கதாசிரியராக.. நடிகராக என்று பன்முக திறமை கொண்டவராக இருந்தார்.. ஒரு திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதி முடித்த போது.. அவரது வீட்டில் வேறு சில பிரச்சனைகளால்.. அந்தத் திரைப்பட  வேலை அப்படியே நின்று போனது..


இரண்டு வருடம் கழித்து.. அந்தத் திரைப்படம் எடுக்கும்போது அவரே ஒரு நடிகராக நடித்தார்.. சில கடினமான சீன்ஸ் கடினமான வசனங்கள் பேசி நடிக்கும் போது ஏன் டைரக்டர் எவ்வளவு கஷ்டமான விஷயங்களை பண்ண வைக்கிறார் என்று தினமும் குறைபட்டுக்கொண்டார்.. அவரே தான் இதை எழுதினார் என்பதை சுத்தமாக மறந்து விட்டார்.. என்ன ஒரு காமெடி இல்லையா? 


நாமே எழுதி விளையாடும் விளையாட்டை.. நாம் யார் என்று தெரியாத என்ற இந்த மறதி என்னும் விளையாட்டில்.. ஏன் துக்கத்தை.. கடினமான சூழ்நிலைகளை தேர்ந்தெடுத்து இருப்போம்? கஷ்டங்களும் தோல்விகளும் கடினமான மனிதர்களும் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் மிகப்பெரியது.. இந்தப் பாடங்கள் நம்முடைய வளர்ச்சிக்கு.. நம்முடைய மாற்றத்திற்கு .. நம்முடைய உண்மையான ஸ்வரூபத்தை நமக்கு நினைவுபடுத்தும் விஷயமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.. (What an intricate design of Intelligence!) ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனித்தால்.. என்ன ஒரு புத்திசாலித்தனம் என்ற ஆச்சரியப்பட தோன்றும்.. அந்த புத்திசாலித்தனம் எல்லாவற்றையும் செயல்படுத்துகிறது.. இந்த பிரபஞ்சத்தை நடத்துகிறது.. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் நம் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கிறது.. அந்த புத்திசாலித்தனத்தை தனி ஒரு விஷயமாக பார்க்காமல்.. அது நாமே என்று உணர்வதற்கு.. தியானம்! 


(Life is designed for living a full life.. Learn just to remember who we really are!) இந்த மறதி விளையாட்டு போதும் என்று உணர்பவர்கள்.. வீடு திரும்புவார்கள்.. (Remembering / Home coming) 


அதுவரை குறை சொல்லாமல் விளையாடுவோம்..


நாம் தொடர்வோம்…


(மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர்.  ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்)