பெரும் பொங்கல்!
- க.யாஸ்மின் சிராஜூதீன்
தைமாதத்தின் முதல் நாளே
தைப்பொங்கல் திருநாளே
பெரும் பொங்கல்என்பது மரபாகுமே!!
சூரியபகவானுக்கு
செலுத்தும்நாளாகுமே ....!!!
வாசலில் தோரணமும்
வண்ணக்கோலமும்
கண்கொள்ளாக்காட்சியே
புத்தம் புதிய ஆடையே!!! மகிழ்ச்சியே!!
தைபிறந்தால் வழிபிறக்குமே
முயற்சிகள் அனைத்தும் பலிக்குமே!!!
வீட்டின் முற்றத்தில் பொங்கல் அழகுதான் ..!!!
வாழைஇலையில் நெல்லிட்டுதான்
நிறைகுடம் கும்பம் வைத்துதான்
படையல்பொருள்யெல்லாம் எடுத்துவச்சுதான் ....
பிள்ளையார் பிடிச்சி வச்சுதான்
கற்பூரம் ஏற்றி வச்சுதான் ...
பொங்கல் பொங்குது மனம்மகிழ!!
பொங்கலோ பொங்கல் நாவிளம்ப!!
உற்றார் உறவினர் புடைசூழ ...!!!
சூரிய பகவானுக்கும் இயற்கைக்கும்
செலுத்தும் நன்றியே....
பெரும் பொங்கல் திருநாளே !!!
நன்றி மறவாமை என்பதையே
நமக்கு உணர்த்தும் திருநாளே!!!
பொங்கல்பொங்குதுபுதுப்பானையில்
மகிழ்ச்சி பொங்குது உள்ளத்தில்
உறவுகள் கூடுது இல்லத்தில்
நட்பு மலருது மனங்களில்
பொங்கல் பொங்குவது போலவே
அனைவர் வீட்டிலும் செல்வம் செழிக்கவே.....
மகிழ்ச்சி என்றும் நிறைந்திருக்கவே!!!
ஒற்றுமை என்றும் நிலைத்திருக்கவே!
கடவுளை வணங்கிடுவோம்
நன்றி செலுத்திடுவோம்....!!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)