Kamarajar birth day: கையளவு நெஞ்சுக்குள்ள.. கடலளவு எண்ணம் வைத்த.. காமராசர்!
Jul 15, 2026,10:23 AM IST
- இரா. மும்தாஜ் பேகம்
கையளவு நெஞ்சுக்குள்ள
கடலளவு எண்ணம் வைத்தார்
எண்ணம் ஏதும் இல்லை
எல்லாம் நாட்டுக்காக
நாட்டஉயர்த்திட நல்ல திட்டங்கள்
பலவும் போட்டாறடா
ஏட்டுக் கல்வி கற்கவில்லை
இருந்தும் கல்வியை தந்தாரடா
மதிய உணவு திட்டத்தாலே மக்கள் மனதில் நின்றாரடா
அணைகள் பலக்கட்டி நீர்வளம் பெருகிட
ஆணைகள் போட்டாரடா
கல்லூரி வளர்ச்சியும் கைத்தொழில் வளர்ச்சியும்
நாட்டை உயர்த்துமடா
தென்னககாந்தினு பெயரெடுத்த
கிங்மேக்கர் அவர்தானடா
கர்மவீரர் காமராசர் அவரைப் போல் நாமும் வாழ்வோமடா
(இரா.மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர், திருச்சி)