சேலத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரி மனு... என்ன கிழமை தெரியுமா?

Meenakshi
Nov 20, 2025,05:15 PM IST

சென்னை:  டிசம்பர் 4ம் தேதி சேலத்தில் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி மனு அளித்துள்ளார்.


தவெக தலைவர் விஜய் கடந்த அக்டோபர் மாதம் கரூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது விஜய்யை காண அதிகளவில் கூட்டம் வந்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின்னர் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை தவெக தலைவர் விஜய் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார். 




இதனையடுத்து அமைதி காத்து வந்த விஜய், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சென்னை வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார். அதன்பின்னர் தனது கட்சிப்பணிகளை தொடங்கி செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் சென்னையில் தவெக சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் விஜய் கலந்து கொண்டு பேசுகையில், எனது அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்று தெரிவித்ததுடன், திமுக குறித்து கடும் விமர்சனமும் செய்தார்.


அதன்பின்னர் சேலத்தில் இருந்து விஜய் மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று சேலம் காவல் ஆணையரிடம் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.  அந்த மனுவில் அடுத்த மாதம் 4ம் தேதி அனுமதி கோரப்பட்டுள்ளது. சனிக்கிழமைக்கு பதிலாக அதில் வியாழனன்று விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. கோட்டை மைதானம், போஸ் மைதானம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட 3 இடங்களில் ஒன்றில் அனுமதி வழங்க கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.