பிஞ்சு உள்ளத்தில் நஞ்சு முள்
- டாக்டர் கோ. லதா
பள்ளிப் புத்தகம் தொடாத பிஞ்சுக் கைகள்
சுமையை சுமக்கும் சிறு தோள்கள்
விளையாட்டு மறந்த வேதனை வாழ்கை
வயிற்றுப் பசிக்கு விற்கும் கனவுகள்
மண் வெட்டும் மழலை முகம் வாடுதே
தேநீர் ஆற்றும் தளிர் கரம் சுடுதே
கார் கழுவும் குழந்தை கண்ணீர் துளியே
கனவு சிதைக்கும் கொடிய சங்கிலியே
படிக்க வேண்டிய பருவம் பாழாய் போகுதே
பட்டம் பெறாமல் பாதை மறைகுதே
பிஞ்சு உள்ளத்தில் நஞ்சு முள் விழுகுதே
பாவம் இதுவென்று பார் உலகே
குழந்தை உரிமை கொடி பிடிப்போம்
கல்வி ஒளியை கைகளில் ஏந்துவோம்
எதிர்காலம் நமது என்று எழுவோம்
பிஞ்சு சிரிப்பை பூமியில் நிலைக்கச் செய்வோம்
--
உலக அக்கறை தினம்
உலகெங்கும் அக்கறை தினமென ஓங்கி
ஒளிதரும் நன்னாள் உயர்வுடன் வந்ததே
அறிவின் ஒளியும் அன்பின் திறமும்
அனைவரும் போற்றும் அருநாள் இதுவே
படிப்பெனும் பாதை பயணிக்க வேண்டும்
பாங்குடன் நூல்கள் பயில்வது வாழ்வே
ஏட்டின் இனிமை எண்ணத்தை வளர்கும்
ஏற்றம் தருமே எழுத்தின் ஆற்றல்
கற்றோரை மதிப்போம் கருத்தை வளர்போம்
காலமெலாம் நின்று கற்பனை செய்வோம்
பள்ளியும் கல்லூரி பண்பினை ஊட்டும்
பயனுறு கல்வி பாங்குடன் சேர்கும்
உழைப்பெனும் உயர்வு உலகை நடத்தும்
உள்ளத்தின் ஆற்றல் உரமுடன் கூட்டும்
வியர்வை சிந்தி விளையும் பொருளால்
வாழ்வின் வளமை வளர்ந்திடக் காண்போம்
வயலும் தொழிலும் வாய்மை கொள்ளும்
வாளாமல் உழைக்கும் வலிமை வேண்டும்
கைகளின் உழைப்பு கடவுளின் கொடை
கடமை செய்வோம் காலம் போற்றிட
உறவெனும் வேரே உயிரினைக் காக்கும்
உள்ளம் உருகி உவகையை ஈயும்
தாயும் தந்தையும் தாரமும் மக்களும்
தழுவும் அன்பால் தரணி சிறக்கும்
நட்பும் உறவும் நல்லதை வளர்கும்
நாணயம் காத்து நன்றியைப் பேணும்
பகிர்ந்து வாழ்வோம் பாசம் பொழிவோம்
பாரெலாம் அக்கறை பரவிடச் செய்வோம்
படிப்பு உழைப்பு பாங்கான உறவு
பாதை மூன்றும் பண்பினைத் தருமே
அக்கறை தினத்தில் அறிவோம் நாமும்
அன்புடன் வாழ்வோம் ஆனந்தம் கொள்வோம்
--
உலக உணவு பாதுகாப்பு நாள்
உணவே உயிரென உலகம் போற்றிடும்
உழவர் வியர்வை உலகைக் காக்குமே
பசியின் கொடுமை பாரை வாட்டிடும்
பகிர்ந்து உண்ணில் பாரம் தீருமே
நிலமும் நீரும் நெல்லைத் தந்திடும்
நேர்மை உழைப்பே நிறைவை ஈயுமே
வீணைச் செய்யேல் விளைந்த உணவை
வேண்டும் அளவே வேண்டி வாழ்வீர்
பட்டினி இல்லா பாரதம் காண
பாதுகாப்போம் பயிரின் செல்வத்தை
ஏழை பசியை ஏளனம் செய்யேல்
ஈகை உள்ளம் ஏற்றம் தருமே
களஞ்சியம் நிறைக்க கடமை கொள்வோம்
கழிவைத் தவிர்து கருத்தாய் வாழ்வோம்
தானியம் சேமித்து தரணி காப்போம்
தாய் நிலத்தை தழுவி வாழ்வோம்
உணவின் அருமை உணர்ந்து வாழ்வோம்
உலகோர் யாவரும் உண்டு மகிழ
பஞ்சம் வாராது பாங்காய் நடப்போம்
பகுத்து உண்ணும் பண்பை வளர்போம்
ஜூன் ஏழின் நாளில் சாற்றுவோம் சபதம்
ஜீவன் காக்கும் உணவைப் போற்ற
அன்பால் வளர்போம் அமுதின் சுவையை
அனைவரும் வாழ அருளை வேண்டுவோம்
--
ஜூன் 8 சிறப்பு தின கவிதை
ஜூன் எட்டின் நாளே ஜீவனைப் போற்றிடும்
ஆழ்கடல் தன்னை அரவணைத் திடவே
நீலநிறப் பரப்பே நிலத்தின் மூச்சென
நெஞ்சினில் நிறைக்கும் நிம்மதித் தேனே
எழுபது விழுக்காடு எங்கும் நீரென
எழிலுடன் விரியும் ஏகத்தின் கொடையே
ஆக்ஸிஜன் தந்து அனைவரும் வாழ
ஆழியே உன்னை ஆராதித் திடுவோம்
மூளையின் ஆரோக்கியம் முறையுடன் காப்போம்
முனைந்திடும் விழிப்பை முழங்கிட வேண்டும்
தலைவலி தோன்றில் தளராது செல்வோம்
தானியின் கருணை தாங்கிட வேண்டும்
பாரினைப் படைத்த பரமன் கரத்தால்
பாதுகா பாகும் பரிசென வாழ்வோம்
கடலை மாசாக்கி கலங்கிடச் செய்யேல்
கருத்துடன் காத்து கடமை ஆற்றுவோம்
பிளாஸ்டிக் கழிவை பெருங்கடல் சேர்கேல்
பிழையினை நீக்கி பிள்ளைகள் வாழ
உடலெனும் ஆலயம் உயர்வுடன் காப்போம்
உள்ளத்தில் தேவன் உறைந்திட வாழ்வோம்
ஜூன் எட்டின் சபதம் ஜீவனை மதிப்போம்
ஜலத்தையும் உடலையும் சத்தியம் காப்போம்
உலகெலாம் நலமுடன் உயிர்திட வேண்டி
உரக்கவே பாடுவோம் உன்னதன் புகழே
--
தேசிய நண்பர்கள் தினம்
நட்பெனும் செல்வம் நாட்டின் பெருமை
நல்லவர் தோழமை நாளும் இனிமை
உறவு வேறென உலகம் சொன்னாலும்
உள்ளம் ஒன்றான உயர்நட்பே வாழ்வு
துன்பம் வந்தாலும் துணைநிற்கும் நண்பன்
தூணெனத் தாங்கும் தூயவன் ஆவான்
இன்பம் பொங்கினும் இணைந்து மகிழ்வான்
ஏழை செல்வன் என்றில்லை நட்பில்
கைகொடுக்க வருவான் காலமெலாம் வாழ
கண்ணீர் துடைப்பான் கருணை மிகுந்து
பகைவர் சூழ்ந்தாலும் பாதுகா பான்
பாங்குடன் சிரிப்பான் பண்புடன் பேசி
வார்தை ஒன்றினால் வாழ்வை மாற்றும்
வாய்மை நண்பனே வான்புகழ் தருவான்
தேசம் போற்றிடும் தெய்வீக உறவு
தேடியும் கிட்டா தேனினும் இனிய
நண்பர்கள் தினத்தில் நன்றி சொல்வோம்
நாமெலாம் சேர்ந்து நன்மை வளர்போம்
பிரிவு வாராது பேணிட வேண்டும்
பிணக்கு தீர்து பிணைந்திட வாழ்வோம்
நட்பெனும் மலரை நாளும் போற்றி
நாடெங்கும் பரப்பி நலமுடன் வாழ்வோம்
உண்மை நண்பனே உலகின் ஒளியே
உன்னதம் தருவான் உள்ளம் நிறைந்தே
--
வனவளம் காத்து வாழ்
வனமே உயிரென வையகம் அறியும்
வளமெலாம் தருவது மரங்களே ஆகும்
மழையை ஈர்க்கும் மாண்புடைக் காடு
மனிதன் வாழ மூச்சை ஈயும்
கிளைகள் தோறும் கிளிகள் பாடும்
கீழே அருவி குளிர்ந்து ஓடும்
விலங்கும் பறவையும் வாழும் இல்லம்
வெட்டி அழிக்கில் வீழ்வோம் நாமும்
பசுமை காத்து பாரை வாழ்விப்போம்
பழுது செய்யாது பாதை அமைப்போம்
ஒவ்வொரு மரமும் உயிரின் கொடையே
உலகை காக்கும் உன்னத நிழலே
நாமின்று வளர்ப்போம் நற்காடு ஒன்று
வனவளம் பேணி வாழ்ந்திட வேண்டும்
வையகம் தழைக்க வாழ்ந்திடுவோமே
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)