வெளியானது பிளஸ்டூ தேர்வு முடிவுகள்.. 95.20% தேர்ச்சி.. வழக்கம் போல மாணவிகள் அசத்தல்
சென்னை: பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. வழக்கம் போல மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பிளஸ் டூ தேர்வில் மொத்தம் 95.20 சதவீதம் மாணவ மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில் மாணவியரின் எண்ணிக்கை 97 சதவீதம் ஆகும். மாணவர்கள் எண்ணிக்கை 93.19 சதவீதம் ஆகும்.
தமிழ்நாட்டிலேயே அதிக அளவாக ஈரோடு மாவட்டத்தில் 98.87 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். சிவகங்கையில் 98.05, கன்னியாகுமரியில் 97.63, திருநெல்வேலியில் 97.84, திருச்சியில் 97.50 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பிளஸ்டூ தேர்வு முடிவுகள் சுருக்கமான விவரம்:
தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை : 7,91,654
மாணவியர்களின் எண்ணிக்கை : 4,18,724.
மாணவர்களின் எண்ணிக்கை : 3,72,930.
தேர்ச்சி விவரங்கள்:
மொத்த தேர்ச்சி - 7,53,694 (95.20%).
மாணவியர் 4,06,167 (97.00 %)
மாணவர்கள் 3,47,527 (93.19 %)
மாணவர்களை விட 3.81% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்விற்கு வருகை புரியாதவர்கள்: 7,874.
கடந்த மார்ச் - 2025 பொதுத்தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 7,92,494.
தேர்ச்சி பெற்றோர் 7,53,142, தேர்ச்சி சதவீதம் 95.03%.
கடந்த ஆண்டு பொதுத்தேர்வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 0.17% சதவீதம் கூடுதலாக உள்ளது.