முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்

Meenakshi
May 10, 2025,03:02 PM IST

டெல்லி:  டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவரச ஆலோசனை நடத்தி வருகிறார்.


இந்தியாவில் போர்பதற்றம் நிலவிவரும் நிலையில், பாகிஸ்தான் ட்ரோன்களை பயன்படுத்தி வான் வழி தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 26 நகரங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின் போது ஏவப்பட்ட டிரோன்களை இந்தியா ராணுவம் நடுவானில் அழித்தது. மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த மாநிலங்களில் இருளில் மூழ்கின.


பாகிஸ்தான் நாட்டின் உணவு மற்றும் வேளாண் உற்பத்தியில் முக்கியமாக திகழும் கரியான் மற்றும் ஜலால்பூர் ஜெட்டா நகரில் இந்திய டிரோன்கள் தாக்குதலை தொடங்கின. மேலும் பாகிஸ்தான் மீதான பீரங்கி தாக்குதலையும் இந்தியா அதிகரித்துள்ளது. அதேநேரம் பாகிஸ்தான், காஷ்மீரின் ஸ்ரீநகரில் தாக்குதலை தீவிரப்படுத்தியது. அதுமட்டுமின்றி ஸ்ரீநகர் விமான நிலையத்தை நோக்கி வந்த டிரோனை இந்தியா அழித்தது.




இந்தியா பாகிஸ்தான் இடையே மாறிமாறி எல்லைப் பகுதிகளில் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதால், தற்போது இந்த இருநாடுகளின் எல்லைப்பகுதியில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். எல்லையில் நிலவி வரும் பதற்றத்தின் போது முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசணை நடத்தி வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.