ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
Jul 11, 2025,05:10 PM IST
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக அரியலூர், பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி செயல்பட்டு வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி செயல்பட்டு வருகிறார். அதே போல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அவர் பிரச்சார பயணத்தை துவங்கி செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரை தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்திக்க உள்ளது. இதனால், பிரதமர் மோடியின் தமிழகம் வருகை முக்கியம் வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி ஜூலை 27, 28ம் தேதி ஆகிய இரு நாட்களில் தமிழ்நாடு வருகிறார். கங்கை கொண்ட சோழபுரத்தில் அடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி. 27, 28 ஆகிய தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சில அரசியல் மீட்டிங்குகள், கூட்டணி தொடர்பான சில அலோசனைகளும், இன்னபிற கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது குறித்தும் பேச்சுவார்த்தைகளும் நடைபெறும் என்று கூறப்பட்டு வருகிறது.
பிரதமர் வருகையையொட்டி கங்கைகொண்ட சோழபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக 2ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்க விருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.