இந்திய ராணுவத்தின் வலிமையை உலகமே கண்டது: பிரதமர் மோடி பெருமிதம்

Su.tha Arivalagan
Jul 21, 2025,11:54 AM IST

டெல்லி : இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரின்போது உலகமே கண்டதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் வெளியிட்டுள்ளார்.


பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கைக்கு பிறகு நடக்கும் முதல் கூட்டம் இது. பாகிஸ்தானில் இருந்த தீவிரவாத முகாம்களை இந்தியா தாக்கியது. பிரதமர் நரேந்திர மோடி கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நமது ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவர் பெருமிதம் வெளியிட்டார்.


ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை 32 நாட்களில் 21 அமர்வுகளாக இந்த கூட்டத்தொடர் நடக்கும். ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 17 வரை சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும். ஆகஸ்ட் 18-ல் மீண்டும் கூட்டம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 22 அன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் இறந்தனர். இதில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். இந்த தாக்குதலை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஆபரேஷன் சிந்துர் குறித்து கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளன. 




பிரதமர் மோடி இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சமாதானம் செய்ய முன் வந்ததாக கூறியது குறித்தும் பதில் வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கேட்க உள்ளன.


இந்நிலையில் மழைக்கால கூட்டத் தொடர் துவங்கும் முன் செய்தியாளர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, பஹல்காமில் நடந்த கொடூர தாக்குதல் உலகம் முழுவதையும் உலுக்கி உள்ளது.கட்சி நலன்களை ஒதுக்கி வைத்து விட்டு, நாட்டின் நலனுக்காக நமது பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள் உலகின் பல நாடுகளுக்குச் சென்று ஒரே குரலில் பாகிஸ்தானை உலகிற்கு அம்பலப்படுத்த மிகவும் வெற்றிகழமான பிரச்சாரத்தை நடத்தினர். அந்த அனைத்து எம்.பி.,க்களையும் தேசிய நலனுக்காக இந்த முக்கியமான பணியை செய்ததற்காக அனைத்து கட்சிகளையும் நான் பாராட்ட விரும்புகிறேன். இது நாட்டில் ஒரு நேர்மறையான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. 


2014ம் ஆண்டிற்கு முன்பு நாட்டில் பண வீக்க விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்தது. இன்று, பணவீக்க விகிதம் சுமார் இரண்டு சதவீதமாக குறைந்து வருவதால் அது நாட்டில் உள்ள சாதாரண மக்களின் வாழ்க்கையில் ஒரு நிம்மதியாகவும் வசதியாகவும் மாறி உள்ளது. 2 5 கோடி ஏழை மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இது உலகின் பல நிறுவனங்களால் பாராட்டப்படுகிறது என தெரிவித்துள்ளார்.