காவி கட்டி சாந்தம் சொன்ன வீரத்துறவியே!
Jan 12, 2026,04:04 PM IST
- கலைவாணி ராமு
இளைஞர்களின் எழுச்சி நாயகனே....
எங்கள் வீட்டுப்பிள்ளைகளுக்கு கதாநாயகனே.....
உங்கள் வழி நடந்தால் நாங்கள் எல்லாம் உலக நாயகனே.....
காவி கட்டி சாந்தம் சொன்ன வீரத்துறவியே.....
கடல் நடுவே சிலையாய் நின்றவரே......
கைகட்டி சும்மா இருப்பவர் மத்தியில்
கைகட்டி செயல்கள் பல புரிந்தவரும் நீதான்.....
உன் பொன்மொழிகள் அனைவருக்கும் ஒரு பாடம்.....
முடியாது என்பது மூடநம்பிக்கை முடியுமா என்பது அவநம்பிக்கை
முடியும் என்பதே தன்னம்பிக்கை என்ற பொன் மொழிகளை வலியுறுத்தியவரே....
அயல்நாடுகளுக்கும் சென்று இந்தியாவின் பெருமையை அறிய உரைத்தவரே....
நீ பிறந்ததால் நம் நாடு பெருமை கொள்கிறது....
உன் பொன்மொழிகளை ஏற்று நடந்தால் நாங்களும் சிறந்தவர்களாக விளங்குவோம்....
விவேகானந்தரின் பொன்மொழிகளை பின்பற்றி வாழ்வதே...
இக்கால இளைஞர்களின் கடமையாக கொள்வோம்