என் நினைவெனும் கோயிலில் நீதான் இருக்கிறாய்
Aug 31, 2026,03:55 PM IST
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
மனதுக்கு மனதைத்
தூது விட்டேன்!
அதன் பெயர்
டெலிபதியா!
உன் மனதினில்
எனக்கு
இடம் கொடுத்தாய்
என் பெயர் பசுபதியா!
என் நினைவெனும்
கோயிலில் நீ தான்
இருக்கிறாய்!
அது தெய்வீகமா?
என் செவிதனில்
கேட்பது
எப்போதும் உன்
தேவகானமா!
என் கண் முன்னே
மயில் என நீ ஆடுவது
நான் விரும்பும்
பரதமா!
நான் செய்த
பாக்கியமா!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)