அகிம்சை தாத்தாவும்.. விந்தை மனிதர் காமராஜரும்!
- மன்னை அசோகன், மலேசியா
அகிம்சை தாத்தா உன் மேல் எனக்கு சிறு கோபம் தாத்தா
மதத்தால் பிரி(ள)ந்த பழைய பாரதர் இரண்டாய் உடை(த்)ந்தார்
நீரோ குணத்தால் மாற்றலாம் என்ற தவற்றை கண்டீர்
வெறி பிடித்து நிற்போர்க்கு (இருபுறமும்) "அரி" வந்து சொன்னாலும் அவர்க்கு உரைக்காது
குண்டு பட்டு நீ இறந்ததும் குறையில்லை
நீர் நின்று வாழ்ந்திருந்தால் உன்னையும் அரசியல் அழுக்கு பற்றியிருக்கும்
மீண்டும் பிறந்து வா தாத்தா
விரைவில் தாத்தா ஆகப்போகும்
உன் பேரன் ஆசைப்படுகிறேன்
விந்தை மனிதர் காமராஜர்
விந்தை மனிதர் காமராஜர்
சிந்தை எப்போதும் தமிழக மேம்பாடு
எளிமையாய் வாழ்ந்த ஆட்சியாளர்
அரசியலில் நேர்மையாய் உழைத்த உத்தம புத்திரன்
கல்விக் கண் திறந்த படிக்காத மேதை
பொற்கால ஆட்சி புரிந்த கிருஷ்ண காந்தி
இந்திய பெருநில அரசியலிலும் இணையற்ற தலைவர்
நேர்மையின் சின்னம்........எளிமையின் இலக்கணம்.......இன்று வரை அரசியலாலர்க்கு அரசியல் களஞ்சியம்
காலம் எத்தனை ஆனாலும் காமராஜரே நிந்தன் திருப்பெயர் வாழியவே